குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தை இந்து முன்னணியினர் முற்றுகை
குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தை இந்து முன்னணியினர் முற்றுகை
குடியாத்தம்
சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியல்கட்சி கொடிகள் அகற்றப்பட்டு வருகிறது. குடியாத்தம் நகர இந்து முன்னணி சார்பில் குடியாத்தம் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் கொடி ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்து முன்னணி அரசியல் அமைப்பு கிடையாது, இதுவரை யாரும் தேர்தலில் போட்டியிட்டதில்லை, யாருக்கும் ஆதரவு கொடுத்ததும் இல்லை. எனவே நாங்கள் கொடி கம்பங்களை அகற்றமாட்டோம் என நகராட்சி ஆணையாளர் மற்றும் உதவி கலெக்டரிடம் மனு அளித்திருந்தனர்.
இந்தநிலையில் நகராட்சி பணியாளர்கள் இந்து முன்னணி கொடி கம்பங்களை அகற்ற முற்பட்டனர். இதனை கண்டித்தும், இந்து முன்னணி கொடி கம்பங்களை அகற்றக் கூடாது என வலியுறுத்தியும், இந்து முன்னணியினர், மாவட்ட செயலாளர் சாய்ஆனந்தன் தலைமையில் குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் தரணி, ஒன்றிய தலைவர் ரவி, நகர செயலாளர்கள் கார்த்திக், பிரபாகரன், மகேஷ், யோகா, பலராமன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் சென்று கொடி கம்பம் அகற்றுவது தொடர்பாக அதிகாரிகளிடம் பேசினர். இதனை தொடர்ந்து இந்து முன்னணி கொடி கம்பங்களை அகற்ற மாட்டோம் என உறுதி அளித்ததை தொடர்ந்து இந்து முன்னணியினர் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story