குப்பை கிடங்கில் திடீர் தீ


குப்பை கிடங்கில் திடீர் தீ
x
தினத்தந்தி 1 March 2021 11:11 PM IST (Updated: 1 March 2021 11:11 PM IST)
t-max-icont-min-icon

குப்பை கிடங்கில் திடீரென தீ பிடித்து எரிந்தது.

திருமங்கலம், 
திருமங்கலம் கப்பலூர் அருகே உச்சப்பட்டி செல்லும் சாலையின் ஓரத்தில் குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் மர்ம நபர்கள் தீ வைத்து விட்டுச்சென்றனர். குப்பை கிடங்கில் பிடித்த தீ மளமளவென பரவி அருகில் உள்ள மற்றொரு குப்பைக்கிடங்கில் பரவ ஆரம்பித்தது. இதுகுறித்து பொதுமக்கள் திருமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் ஜெயராணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக பக்கத்தில் இருந்த வீடுகள் மற்றும் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

Next Story