கோரிக்கை மனுக்களை பெட்டியில் அளித்தனர்


கோரிக்கை மனுக்களை பெட்டியில் அளித்தனர்
x
தினத்தந்தி 1 March 2021 11:46 PM IST (Updated: 1 March 2021 11:46 PM IST)
t-max-icont-min-icon

தேர்தல் நடத்தை விதிமுறையால் புதுக்கோட்டை யில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்தானது. இதனால் நேற்று பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை பெட்டியில் அளித்தனர்.

புதுக்கோட்டை, மார்ச்.2-
தேர்தல் நடத்தை விதிமுறையால் புதுக்கோட்டை யில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்தானது. இதனால் நேற்று பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை பெட்டியில் அளித்தனர்.
மனு  பெட்டி
சட்டமன்ற தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்தன. இதனால் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்க வசதியாக நுழைவுவாயில் பகுதியில் மனு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் மனுக்கள் அளிக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். பொதுமக்கள் வசதிக்காக வைக்கப்பட்ட பெட்டியில் மனுக்களை அதில் அளித்தனர்.
குடிசை மாற்று வாரிய வீடு
நரிமேட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு வாங்க பணம் கட்டிய பயனாளிகள் சிலர் தங்களுக்கு வீட்டினை ஒதுக்கி வழங்குமாறும், 3 ஆண்டுகளுக்கு முன்பு கடன் வாங்கி ரூ.95 ஆயிரத்து 500 வழங்கிய நிலையில் தற்போது அதற்கு வட்டி செலுத்தி வருவதாகவும், தங்களுக்கு இதுவரை வீடும் வழங்கப்படாதததால் பெரும் அவதி அடைவதாகவும், வீட்டினை உடனடியாக வழங்கிட வேண்டும் என கோரி மனுக்கள் அளித்தனர்.
 இதேபோல பொதுமக்கள் பலர் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அந்த பெட்டியில் போட்டனர். மனுக்கள் அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்குள் யாரையும் போலீசார் விடவில்லை.

Next Story