சேற்றில் சிக்கி தவித்த பசுமாடு மீட்பு


சேற்றில் சிக்கி தவித்த பசுமாடு மீட்பு
x
தினத்தந்தி 1 March 2021 11:56 PM IST (Updated: 1 March 2021 11:56 PM IST)
t-max-icont-min-icon

சேற்றில் சிக்கி தவித்த பசுமாடு மீட்கப்பட்டது.

வாடிப்பட்டி, 
வாடிப்பட்டி அருகே வடுகபட்டி முத்தாலம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் பவுன் பாண்டியன் (35). விவசாயி. இவர் பசுமாடு வளர்த்து வருகிறார். அந்த மாடு தற்போது சினைபிடித்துள்ளது. இந்தநிலையில் நேற்று காலை 10 மணிக்கு வடுகபட்டி அரிசிஆலை எதிரில் உள்ள பெரியாறு பாசன கால்வாய் ஓடையில் மாட்டினை குளிப்பாட்டி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சேற்றில் புதைகுழிக்குள் மாடு சிக்கிக்கொண்டது. உடனே அதை மீட்க முயற்சித்தார். அவரால் முடியவில்லை. அந்த புதைகுழியில் மாட்டின் கால்கள்முழுவதும் புதைந்துகொண்டது. இதனால் மாடு சேற்றில் சிக்கி தவித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வாடிப்பட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி சதகத்துல்லா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 1 மணிநேரம் போராடி புதைகுழிக்குள் சிக்கி இருந்த பசு மாட்டினை பத்திரமாக மீட்டனர்.

Next Story