திருப்பூர் பகுதிகளில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை
திருப்பூர் பகுதிகளில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை
திருப்பூர்,:
திருப்பூர் பகுதிகளில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
24 பறக்கும் படை
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் உரிய ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு செல்லக்கூடாது. அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கக்கூடாது என்பது உள்பட ஏராளமான விதிமுறைகள் உள்ளது.
இதனை கண்காணிக்க மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளையும் சேர்த்து 24 பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர வீடியோ கிராபர்கள், தேர்தல் நிலை கண்காணிப்பு குழு போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பறக்கும் படையினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்ற தொகுதி பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வாகன சோதனை தீவிரம்
அதன்படி திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மண்ணரை, கூலிப்பாளையம் நால்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்றுகாலை பறக்கும் படை அதிகாரி கீதா தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த கார், ஆட்டோ உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர்.
இதுபோல் ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் கொண்டு சென்றால், அதற்கான ஆவணத்தையும் கொண்டுவர வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் பணம் பறிமுதல் செய்யப்படும். தொடர்ந்து உரிய ஆவணத்தை கொடுத்தால், பணம் திருப்பி கொடுக்கப்படும் எனவும் வாகன ஓட்டிகளிடமும், பொதுமக்களிடமும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
Related Tags :
Next Story