வேலூர் மாவட்டத்தில் 208 துப்பாக்கிகள் போலீஸ் நிலையங்களில் ஒப்படைப்பு


வேலூர் மாவட்டத்தில் 208 துப்பாக்கிகள் போலீஸ் நிலையங்களில் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 2 March 2021 12:04 AM IST (Updated: 2 March 2021 12:04 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் 208 துப்பாக்கிகள் போலீஸ் நிலையங்களில் ஒப்படைப்பு

வேலூர்

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதையொட்டி உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அவற்றை அந்தந்த போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. அதன்படி துப்பாக்கி உரிமையாளர்கள் போலீஸ் நிலையங்களில் அவற்றை ஒப்படைத்து வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் 763 பேர் கைத்துப்பாக்கி, நாட்டு துப்பாக்கி வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் வங்கி பாதுகாப்பு பணி தொடர்பாக துப்பாக்கி வைத்திருக்கும் நபர்கள் தவிர மற்றவர்கள் போலீஸ் நிலையங்களில் துப்பாக்கியை ஒப்படைத்து வருகிறார்கள். 

அதன்படி வேலூர் மாவட்டத்தில் இதுவரை 208 பேர் தங்களின் துப்பாக்கியை போலீஸ் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர். மீதமுள்ள நபர்களும் விரைவில் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story