திருச்செங்கோட்டில் அஞ்சல் அலுவலக பணியாளர் தற்கொலை


திருச்செங்கோட்டில் அஞ்சல் அலுவலக பணியாளர் தற்கொலை
x
தினத்தந்தி 2 March 2021 12:05 AM IST (Updated: 2 March 2021 12:05 AM IST)
t-max-icont-min-icon

திருச்செங்கோட்டில் அஞ்சல் அலுவலக பணியாளர் தற்கொலை

எலச்சிபாளையம்:
திருச்செங்கோட்டில் அஞ்சல் அலுவலக பணியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்காலிக பணியாளர்
திருச்செங்கோடு மாங்குட்டைபாளையம் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் காந்திமதி. இவருடைய 2-வது மகன் தினேஷ்குமார் (வயது 21). இவர் மோகனூர் அருகே வாழவந்தி அஞ்சல் அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தார். இவர் திருச்செங்கோட்டில் இருந்து தினமும் தன்னுடைய மோட்டர் சைக்கிளில் வாழவந்திக்கு சென்று வந்தார். 
இந்தநிலையில் கடந்த சில தினங்களாக தினேஷ்குமார் மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை தன் நண்பர்களிடம் அடிக்கடி கூறி வந்தாராம். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் கடந்த 28-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
விசாரணை
இந்த தற்கொலை சம்பவம் குறித்து திருச்செங்கோடு டவுன் போலீசில் காந்திமதி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
==========

Next Story