குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர்
குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது.
அரவக்குறிச்சி
காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலமாக நொய்யல் அருகே மரவாபாளையம் காவிரி ஆற்றிலிருந்து மின்மோட்டார் மூலமாக அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம பொது மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அரவக்குறிச்சி வழியாக பள்ளப்பட்டி மற்றும் கிராமங்களுக்கு செல்லும் குடிநீர் குழாயில் பள்ளப்பட்டி ரெங்கராஜ் நகர் மாரியம்மன் கோவில் அருகில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல நாட்களாக தண்ணீர் வழிந்தோடி செல்கிறது. இதனால் தண்ணீர் சாலைகளிலும், அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளிலும் தேங்கி நிற்கின்றது. இதனால் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story