வேலூரில் அரசுப்பள்ளி ஆசிரியைக்கு கொரோனா


வேலூரில் அரசுப்பள்ளி ஆசிரியைக்கு கொரோனா
x
தினத்தந்தி 2 March 2021 12:17 AM IST (Updated: 2 March 2021 12:17 AM IST)
t-max-icont-min-icon

வேலூரில் அரசுப்பள்ளி ஆசிரியைக்கு கொரோனா

வேலூர்
ஆசிரியைக்கு கொரோனா

தமிழகத்தில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகளில் பாடங்கள் எடுக்கப்படுகிறது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடங்கள் கற்று கொடுக்கப்பட்டு வருகிறது. பள்ளிக்கு வரும் மாணவர்கள், ஆசிரியர்கள் உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் அனைவரும் முககவசம் அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வேலூர் மாநகராட்சியில் உள்ள அரசு மேல்நிலைபள்ளியில் புணிபுரியும் ஆசிரியை கடந்த 26-ந் தேதி காய்ச்சலால் அவதியடைந்தார். அதையடுத்து அவர் பள்ளியில் இருந்து பாதியில் வீட்டிற்கு சென்றார். சளிமாதிரி பரிசோதனையின் முடிவில் ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கல்வி அலுவலர் ஆய்வு

இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பள்ளி வகுப்பறை, வளாகத்தில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்து, சுகாதாரப்பணியில் ஈடுபட்டனர். மாணவ-மாணவிகள், ஆசிரியர்களின் உடல்நிலை தெர்மல்கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பின்னரே அவர்கள் பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர். 

பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, ஆசிரியர்களின் சளிமாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பள்ளியில் செய்யப்பட்டுள்ள சுகாதாரப்பணிகள், முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி நேற்று ஆய்வு செய்தார். அப்போது மாணவ-மாணவிகளை சமூக இடைவெளியுடன் அமர வைக்கும்படியும், அடிக்கடி கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யும்படியும் கூறினார்.



Next Story