மணல் திருடிய 2 பொக்லைன் எந்திரங்கள் பறிமுதல்


மணல் திருடிய 2 பொக்லைன் எந்திரங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 2 March 2021 12:21 AM IST (Updated: 2 March 2021 12:21 AM IST)
t-max-icont-min-icon

பரமக்குடி அருகே மணல் திருடிய 2 பொக்லைன் எந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பரமக்குடி

பரமக்குடி அருகே உள்ள தென்பொதுவக்குடி கண்மாயில் திருட்டுத்தனமாக மணல் அள்ளுவதாக பரமக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்புசாமி தலைமையில் போலீசார் அங்கு சென்றனர். அப்போது போலீசார் வருவதை கண்ட மணல் கொள்ளையர்கள் லாரியை எடுத்து கொண்டு தப்பிச் சென்றனர். பொக்லைன் எந்திரங்களை எடுத்து செல்ல முடியவில்லை. உடனே போலீசார் அங்கிருந்த 2 பொக்லைன் எந்திரங்களை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் கருப்புசாமி கொடுத்த புகாரின் பேரில் டிரைவர் பிரமயன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story