பெண்களிடம் தகராறில் ஈடுபட்டவர் மீது வழக்கு


பெண்களிடம் தகராறில் ஈடுபட்டவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 2 March 2021 12:24 AM IST (Updated: 2 March 2021 12:24 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அருகே பெண்களிடம் தகராறில் ஈடுபட்டவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே உள்ள சூரங்கோட்டை கே.கே.நகரை சேர்ந்தவர் முருகன் மகன் பால்ராஜ் (வயது 39). கிராம தலைவராக இருந்து வருகிறார். இவரின் வீட்டின் அருகில் கொட்டகை பகுதியை சேர்ந்த கந்தவேல் மகன் மதன்குமார் என்பவர் குடியிருந்து வருகிறார். இவர் அடிக்கடி மதுபோதையில் தகராறு செய்து ஆபாசமாக பேசி வந்தாராம். இதுகுறித்து பலரும் புகார் செய்ததன் அடிப்படையில் பால்ராஜ் நேற்று முன்தினம் சென்று கண்டித்துள்ளார். அப்போது மதன்குமார் ஆபாசமாக பேசி தாக்க வந்தாராம். இதனை கண்ட அப்பகுதி பெண்கள் அருகில் சென்று கண்டித்தபோது மதன்குமார் அவர்களிடமும் தகராறில் ஈடுபட்டாராம். இதுகுறித்து பால்ராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதன்குமாரை தேடிவருகின்றனர்.

Next Story