மதுவிற்ற 3 பேர் கைது


மதுவிற்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 2 March 2021 12:54 AM IST (Updated: 2 March 2021 12:54 AM IST)
t-max-icont-min-icon

மதுவிற்ற 3 பேர் கைது

சாத்தூர், 
இருக்கன்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நென்மேனி ஆற்றுபகுதியில் வைத்து மதுபாட்டில் விற்ற என்.மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த சுந்தர்ராஜ் (வயது48) என்பவரிடம் இருந்து 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர். இதேபோல் சாத்தூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் தலைமையில் போலீஸ் ரோந்து பணியில் ஈடுபட்ட போது ஒ.மேட்டுப்பட்டி காலனியில் ராஜேந்திரன் (55) என்பவரிடமிருந்து 4 மது பாட்டில்களும், உப்பத்தூர் விளக்கு அருகில் முள்ளி சேவல் சமத்துவபுரத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி (24) என்பவரிடம் இருந்து 4 மது பாட்டில்கள் பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். 

Next Story