வியாபாரியிடம் ரூ.75 ஆயிரம் பறிமுதல்


வியாபாரியிடம் ரூ.75 ஆயிரம் பறிமுதல்
x
தினத்தந்தி 2 March 2021 1:09 AM IST (Updated: 2 March 2021 1:09 AM IST)
t-max-icont-min-icon

ஆவணங்கள் இல்லாததால் வியாபாரியிடம் ரூ.75 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

அரிமளம், மார்ச்.2-
அரிமளம் ஒன்றியம் ஏம்பல் அருகே வயலாங்குடி பிரிவு சாலையில் அறந்தாங்கி தொகுதி தேர்தல் பறக்கும்படை தலைமை அதிகாரி முத்துக்குமார் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஏம்பல் பகுதியிலிருந்து வந்த ஒரு காரை வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது, காரில் வந்த அறந்தாங்கி பகுதியை சேர்ந்த செந்தில் என்பவர்  ரூ.75 ஆயிரத்து 380 வைத்திருந்தார். விசாரணையில் அவர் மளிகை கடைகளுக்கு சோப்பு, ஷாம்பு உள்ளிட்ட அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்ததாகவும், அதில் இருந்து கிடைத்த பணம் என தெரிவித்தார். ஆனால் அந்த பணத்திற்கான உரிய ஆவணம் இல்லை. இதனையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி முத்துக்குமார் அந்த பணத்தை பறிமுதல் செய்து அறந்தாங்கி கோட்டாட்சியர் ஆனந்த் மேகனிடம் ஒப்படைத்தார். இதுதொடர்பாக தேர்தல் பறக்கும் படை அதிகாரி கூறும்போது, உரிய ஆவணங்களை காண்பித்து வியாபாரி மீண்டும் பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தார்.

Next Story