தீக்குளிக்க முயன்றவர் கைது
தீக்குளிக்க முயன்றவர் கைது
விருதுநகர்,
திருச்சுழி அருகே உள்ள ஆலடிப்பட்டியை சேர்ந்தவர் வேதமாணிக்கம் (வயது 45). இவருக்கும், மற்றொருவருக்கும் இடையே உள்ள இடப்பிரச்சினை தொடர்பாக வருவாய் துறையினர் பாரபட்சமான நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறி கலெக்டர் அலுவலகம் வந்தவர், அலுவலக வளாகத்தில் தன் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் வேதமாணிக்கத்திடம் இருந்து பெட்ரோல் கேனை பறிமுதல் செய்து அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். இச்சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து கூரைகுண்டு கிராம நிர்வாக அதிகாரி ராமமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வேதமாணிக்கத்தை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
Related Tags :
Next Story