அறந்தாங்கியில் விவசாயிகள் சாலை மறியல்
அறந்தாங்கியில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அறந்தாங்கி, மார்ச்்.2-
அறந்தாங்கி அருகே சிலட்டூர், கொல்லன்வயல், தாந்தாணி, அழியாநிலை உள்ளிட்ட பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெல் பயிற்களுக்கு அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. இந்த நிவாரண தொகை கிடைக்கவில்லை என்றும், நிவாரணம் எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்பதை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பல முறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி விவசாயிகள் நேற்று அறந்தாங்கி ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story