முக கவசம் அணிந்தால் கொரோனா பரவலை தடுக்கலாம்
முக கவசம் அணிந்தால் கொரோனா பரவலை தடுக்கலாம்
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படை, வருவாய்த்துறை, நகராட்சி சுகாதார பிரிவு, ரோட்டரி கிளப் ஆப் கோல்டன் இணைந்து கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு முக கவசம், கபசுர குடிநீர் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் இசக்கி துரை தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் வேலவன் வரவேற்றார். நகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி, முன்னாள் ரோட்டரி சங்க தலைவர்கள் கனகராஜ், முத்துவேல் முன்னிலை வகித்தனர். அருப்புக்கோட்டை தாசில்தார் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு 2 ஆயிரம் முக கவசங்களை பொதுமக்களுக்கு வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா பரவலை தடுக்க அரசு கூறிய அனைத்து விதிமுறைகளையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என கூறினார். முடிவில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ராஜவேல் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை தேசிய மாணவர் படை அலுவலர் சுப்பாராஜ், நாட்டு நலத்பணி திட்ட அலுவலர்கள் சரவணன், உத்தமபிரியா, தனலட்சுமி ஆகியோர் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story