மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி
மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி சோழவந்தானில் நடந்தது.
சோழவந்தான்,
சோழவந்தான் கூடைப்பந்தாட்ட கழகத்தின் சார்பாக மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி நடந்தது.
22 அணிகள்
சோழவந்தான்அரசு அரசஞ்சண்முகனார் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் கூடைப்பந்து போட்டிகள் 3 நாட்கள் நடந்தன. இதில் மாவட்ட அளவில் 22 அணிகள் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடின.
போட்டியில் தமிழ்நாடு போலீஸ் அணி முதல்பரிசும், மதுரை ஆயுதப்படை போலீஸ் அணி 2-வது பரிசும், சேது பி.பி.சி. அணி 3-வது பரிசும், மதுரை பிக்காஸ் அணி 4-வது பரிசும் பெற போட்டியில் வெற்றி பெற்றனர். இதற்காக நடந்த பரிசளிப்பு விழாவில் சோழவந்தான் கூடைப்பந்து கழக தலைவர் ராமன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகேசன், கவுரவ ஆலோசகர் தீர்த்தம் என்ற ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நடுவர் மோகன் வரவேற்றார்.
பரிசு
மதுரை மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் மாவட்டச்செயலாளர் வசந்தவேல், மெஜிரா கோட்ஸ் செல்வராஜ், அரசுபோக்குவரத்து கழக மண்டல சூப்பிரண்டு மூர்த்தி, கணேஷ்ராஜன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். முன்னாள் கூடைப்பந்தாட்ட வீரர் சுந்தரேசன் நினைவாக பொன்னாடை போர்த்தப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினர்கள் ஜே.ஜே. போர்ட்ஸ் கிளப் முரளி, சோழகர், பேட்டைபெரியசாமி, முன்னாள் யூனியன் ஆணையாளர் ராஜு மற்றும் பல்வேறு கிராமங்களில் இருந்து கூடைப்பந்து விளையாட்டு ரசிகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். சோழவந்தான் கூடைப்பந்தாட்ட கழகத்தில் பயிற்சி பெறும் 40 மாணவ-மாணவிகளுக்கு பி.ஆர்.சி. மூர்த்தி சீருடைகள் வழங்கினார்.
Related Tags :
Next Story