மதுரை வீரர், வீராங்கனை முதலிடம் பிடித்து சாதனை


மதுரை வீரர், வீராங்கனை முதலிடம் பிடித்து சாதனை
x
தினத்தந்தி 2 March 2021 1:46 AM IST (Updated: 2 March 2021 1:46 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சருக்கான மாநில நீச்சல் போட்டியில் மதுரை வீரர், வீராங்கனை முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

மதுரை, 
முதல்-அமைச்சருக்கான மாநில நீச்சல் போட்டியில் மதுரை வீரர், வீராங்கனை முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
மாநில நீச்சல் போட்டி
முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான நீச்சல் போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள நீச்சல் குளத்தில் நடந்தது. இந்த போட்டியில் முதலிடம் பெறுபவருக்கு ரூ.1 லட்சமும், 2-ம் இடத்திற்கு ரூ.75 ஆயிரமும், 3-ம் இடத்திற்கு ரூ.50 ஆயிரம் ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் முதலிடம் பெற்று வெற்றி பெற்றவர்கள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். அதன்படி மதுரையில் இருந்து 8 வீரர், 8 வீராங்கனைகள் என 16 பேர் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டவர்கள் மாநில போட்டியில் கலந்து கொண்டனர். போட்டிகளில் வயதின் அடிப்படையில் 8 பிரிவாக நடத்தப்பட்டது.
 முதலிடம்
இந்த போட்டியின் முடிவில் ஆண்கள் பிரிவில் மதுரை வீரர் விக்காஸ் 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் முதலிடமும், பெண்கள் பிரிவில் மதுரை வீராங்கனை ரோஷினி 200 மீட்டர் பட்டர்பிளையில் முதலிடமும் பிடித்து சாதனை படைத்தனர். இவர்கள் இருவருக்கும் அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட முதல் பரிசு ரூ.1 லட்சம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற சாதனை படைத்த நீச்சல் வீரர்களை மதுரை மாவட்ட விளையாட்டு அதிகாரி லெனின், தமிழ்நாடு மாநில நீச்சல் சங்க துணைத்தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், மதுரை மாவட்ட நீச்சல் சங்க செயலாளர் கண்ணன், துணைத் தலைவர்கள் சிவபாலன், வெங்கடேஸ்வரன், துணைச்செயலாளர் இளமுருகன், பொருளாளர் அமிர்தராஜ் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினார்கள்.

Next Story