நெல்லை தச்சநல்லூர் பகுதியில் 37 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன
நெல்லை தச்சநல்லூர் பகுதியில் 37 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன
நெல்லை, மார்ச்:
நெல்லை மாநகர பகுதியில் எந்தவித குற்ற செயல்களும் நடைபெறாமல் இருப்பதற்காக கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடந்து வருகிறது. தச்சநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட வடக்கு பாலபாக்யாநகரில் 32 கண்காணிப்பு கேமராக்களும், கரையிருப்பு சிதம்பராபுரம் பகுதியில் 5 கண்காணிப்பு கேமராக்களும், ஆக மொத்தம் 37 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த கேமராக்களின் இயக்கத்தை நேற்று நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உதவி போலீஸ் கமிஷனர் சதீஷ்குமார், தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story