95 துணை ராணுவத்தினர் தஞ்சை வருகை


95 துணை ராணுவத்தினர் தஞ்சை வருகை
x
தினத்தந்தி 2 March 2021 2:44 AM IST (Updated: 2 March 2021 2:44 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 95 துணை ராணுவத்தினர் தஞ்சைக்கு வந்துள்ளனர்.

தஞ்சாவூர்;
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 95 துணை ராணுவத்தினர் தஞ்சைக்கு வந்துள்ளனர்.
சட்டசபை தேர்தல் 
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்தமாதம்(ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பணி பலப்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து பகுதிகளிலும் போலீசார் ரோந்து சுற்றி வந்து தேர்தல் நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறார்கள்.
இதேபோல் கண்காணிப்பு குழுவினரும் அரசியல் கட்சியினரின் செயல்பாடுகள், பிரசாரங்களை கண்காணிக்க தொடங்கிவிட்டனர். தேர்தல் பாதுகாப்பு பணியையொட்டி சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தவிர்க்க துணை ராணுவ படையினர் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
துணை ராணுவம் வருகை 
தஞ்சை மாவட்டத்தில் 102 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்படுவதுடன் போலீசாருடன் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மேலும் வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக கொண்டு செல்வது, வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு வருவது போன்ற பணிகளிலும் துணை ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
அதன்படி தஞ்சை மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக புதுடெல்லியில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் சென்னை ஆவடிக்கு வந்தனர். அங்கிருந்து இருந்து ரெயில் மூலமாக 95 துணை ராணுவத்தினர் தஞ்சைக்கு வந்தனர். இவர்கள் அனைவரும் தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள அரசர் மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Next Story