சேலத்தில் ஒருதலைக்காதலால் 2 வாலிபர்கள் தூக்குப்போட்டு தற்கொலை


சேலத்தில் ஒருதலைக்காதலால் 2 வாலிபர்கள் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 2 March 2021 3:15 AM IST (Updated: 2 March 2021 3:15 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் வெவ்வேறு இடங்களில் ஒருதலைக்காதலால் 2 வாலிபர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

கன்னங்குறிச்சி:
சேலத்தில் வெவ்வேறு இடங்களில் ஒருதலைக்காதலால் 2 வாலிபர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஒருதலைக்காதல்
சேலம் கோரிமேட்டை அடுத்த சின்னக்கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன் மகன் விக்னேஷ் (வயது 20). தொழிலாளி.
இவர் ஒரு பெண்னை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் மனமுடைந்த விக்னேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இதேபோன்று சேலம் செட்டிச்சாவடி திருவேணி நகரைச் சேர்ந்தவர் அறிவழகன் (28). இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கன்னங்குறிச்சி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சேலத்தில் வெவ்வேறு இடங்களில் ஒருதலைக்காதலால் 2 வாலிபர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story