சேலத்தில் போக்குவரத்து போலீசாருக்கு தொப்பிகள், நீர்மோர்


சேலத்தில் போக்குவரத்து போலீசாருக்கு தொப்பிகள், நீர்மோர்
x
தினத்தந்தி 2 March 2021 3:53 AM IST (Updated: 2 March 2021 3:53 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில், வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் போக்குவரத்து போலீசாருக்கு தொப்பிகள், நீர்மோரை உதவி கமிஷனர் வழங்கினார்.

சேலம்:
சேலத்தில், வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் போக்குவரத்து போலீசாருக்கு தொப்பிகள், நீர்மோரை உதவி கமிஷனர் வழங்கினார்.
தொப்பிகள்
சேலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கோடைக்காலத்தில் போக்குவரத்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு ஆண்டுதோறும் மாநகர போலீசார் சார்பில் நீர்மோர், குளிர்ச்சி தரக்கூடிய தொப்பிகள் மற்றும் கருப்பு கண்ணாடி ஆகியவை வழங்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே போக்குவரத்து பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு நீர்மோர், தொப்பிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
உதவி கமிஷனர்
இதில் போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி கலந்து கொண்டு போலீசாருக்கு தொப்பிகள் மற்றும் நீர்மோர் ஆகியவை வழங்கினார். இதேபோல் மற்ற இடங்களில் பணியாற்றும் போக்குவரத்து போலீசாருக்கு நீர்மோர், தொப்பிகள் ஆகியவை வழங்கப்பட்டன.

Next Story