கோவையில் நாளை போக்குவரத்து மாற்றம்
கோனியம்மன் கோவில் தேரோட்டத்தையொட்டி கோவையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
கோவை,
கோனியம்மன் கோவிலில் நாளை (புதன்கிழமை) மதியம் 2 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளதால், மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி சாலைகளில் இருந்து உக்கடம் வழியாக நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சுங்கம் பைபாஸ், ரெயில்வே மேம்பாலம் கிளாசிக் டவர் வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
அவினாசி சாலை, திருச்சி சாலை பகுதிகளில் இருந்து வைசியாள் வீதி வழியாக பேரூர் செல்லும் அனைத்து வாகனங்களும் டவுன்ஹால், உக்கடம் சென்று பேரூர் பைபாஸ் ரோடு வழியாக சிவாலயா சந்திப்பை அடைந்து பேரூர் செல்ல வேண்டும்.
வாகனங்களை நிறுத்தக்கூடாது
பேரூரில் இருந்து செட்டி வீதி, ராஜவீதி வழியாக நகருக்குள் வரும் வாகனங்கள் சலீவன் வீதி வழியாக காந்திபார்க்கை அடைந்து நகருக்குள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லாம்.
ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கே.ஜி.வீதி ஆகிய சாலைகளில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை எந்த வாகனமும் நிறுத்த அனுமதி இல்லை.
இந்த தற்காலிக போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். இ்வ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story