ஊத்துக்குளி அருகே உடைத்து பெயர்க்கப்பட்ட ஏ.டி.எம். எந்திரம் பெருந்துறை தேசிய நெடுஞ்சாலையில் கிடந்தது- கொள்ளையர்கள் ஈரோடு மாவட்டத்தில் பதுங்கலா? விசாரணை தீவிரம்
ஊத்துக்குளி அருகே உடைத்து பெயர்க்கப்பட்ட ஏ.டி.எம். எந்திரம் பெருந்துறை தேசிய நெடுஞ்சாலையில் கிடந்தது. அதனால் கொள்ளையர்கள் ஈரோடு மாவட்டத்தில் பதுங்கி உள்ளார்களா? என்று போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளார்கள்.
பெருந்துறை,
ஊத்துக்குளி அருகே உடைத்து பெயர்க்கப்பட்ட ஏ.டி.எம். எந்திரம் பெருந்துறை தேசிய நெடுஞ்சாலையில் கிடந்தது. அதனால் கொள்ளையர்கள் ஈரோடு மாவட்டத்தில் பதுங்கி உள்ளார்களா? என்று போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளார்கள்.
ஏ.டி.எம். எந்திரம் உடைப்பு
திருப்பூர் மாவட்டம் கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் பாங்க் ஆப் பரோடா வங்கி உள்ளது. இந்த வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் வங்கி வளாகத்திலேயே செயல்பட்டு வருகிறது.
வழக்கம்போல் நேற்று முன்தினம் காலை பொதுமக்கள் இந்த ஏ.டிஎம்.மில் பணம் எடுக்க சென்றார்கள். ஆனால் ஏ.டி.எம். எந்திரம் பெயர்த்து எடுத்து கொண்டுசெல்லப்பட்டு இருந்தது.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும், ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை போட்டு பார்த்தார்கள். அப்போது நேற்று முன்தினம் அதிகாலை ஒரு காரில் 4 மர்ம நபர்கள் முகமூடி அணிந்து வருவதும், பின்னர் ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைந்து அதை உடைக்க முயன்றதும் தெரிந்தது. மேலும் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியாததால் கொள்ளையர்கள் அதை உடைத்து பெயர்த்து எடுத்து தாங்கள் வந்த காரில் கட்டி இழுத்து செல்வதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாயிருந்தது.
கொள்ளைக்கு பயன்படுத்திய கார்
இதனால் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினார்கள். அப்போது கொள்ளையர்கள் வந்த கார் எண்ணை வைத்து விசாரித்த போது, அந்த கார் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள நல்லகவுண்டன்பாளையத்தை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்பதும், அந்த காரை கொள்ளையர்கள் திருடி வந்து கொள்ளைக்கு பயன்படுத்தியதும் தெரிய வந்தது. இதற்கிடையே நேற்று முன்தினம் மதியமே கொள்ளைக்கு பயன்படுத்திய கார் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே நிற்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஏ.டிஎம். எந்திரத்தை கொண்டுவந்த கொள்ளையர்கள் அதை விஜயமங்கலத்தில் வேறு வாகனத்தில் மாற்றிக்கொண்டு தப்பி சென்றது தெரியவந்தது.
அதனால் ஏ.டி.எம். கொள்ளையர்கள் ஈரோடு மாவட்டத்துக்குள்தான் பதுங்கியிருப்பார்கள் என்ற முடிவுக்கு வந்த போலீசார் மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தினார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் பதுங்கலா?
இந்தநிலையில் நேற்று காலை பெருந்துறை சிப்காட் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் வெள்ளியம்பாளையம் பிரிவில் கொள்ளையடிக்கப்பட்ட ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும், ெபருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். பின்னர் உடைக்கப்பட்ட நிலையில் கிடந்த ஏ.டி.எம். எந்திரத்தை பார்வையிட்டு, இதுபற்றி ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார், பெருந்துறை வெள்ளியம்பாளையம் பிரிவிற்கு விரைந்து வந்தார்கள். பின்னர் உடைக்கப்பட்ட ஏ.டி.எம். எந்திரத்தை கைப்பற்றினார்கள்.
கொள்ளையர்கள் காரை திருடியதும், மீண்டும் காரை கொண்டு வந்து நிறுத்தியதும் பெருந்துறை பகுதியில்தான். தற்போது உடைக்கப்பட்ட ஏ.எம்.எம். எந்திரத்தை போட்டிருப்பதும் பெருந்துறை பகுதி தான். அதனால் கொள்ளையர்கள் பெருந்துறை பகுதியில் அல்லது ஈரோடு மாவட்டத்துக்குள் பதுங்கி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே விசாரணை வளையத்தை ஈரோடு மாவட்டத்துக்குள் போலீசார் வீசியிருக்கிறார்கள்.
Related Tags :
Next Story