பர்கூர் வனப்பகுதியில் மாகாளிக்கிழங்கு கடத்திய லாரி டிரைவருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம்
பர்கூர் வனப்பகுதியில் மாகாளிக்கிழங்கு கடத்திய லாரி டிரைவருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
அந்தியூர்
அந்தியூர் அருகே உள்ள செல்லம்பாளையம் சோதனைச்சாவடியில் வனத்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார்கள். அப்போது பர்கூர் வனப்பகுதியில் இருந்து ஒரு லாரி வந்தது. அதை வனத்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது லாரிக்குள் 4 மூட்டைகள் இருந்தன. அதை பிரித்து பார்த்தபோது அதில் மாகாளிக்கிழங்குகள் இருந்தன.
மாகாளிக்கிழங்கு மருத்துவ குணம் கொண்டதாகும். அதை வனப்பகுதியில் இருந்து அனுமதியின்றி கொண்டு செல்வது குற்றமாகும். அதனால் போலீசார் மாகாளிக்கிழங்கை லாரியுடன் பறிமுதல் செய்தார்கள். மேலும் லாரியை ஓட்டிவந்த டிரைவர் முருகேசன் மீது வழக்குப்பதிவு செய்து, மாவட்ட வன அதிகாரி விஸ்மிஜு விஸ்வநாதன் உத்தரவின் பேரில் முருகேசனுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தார்கள்.
Related Tags :
Next Story