தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக கொண்டு சென்ற 4 பேர் கைது; 2 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல்
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக கொண்டு சென்ற 4 பேரை போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 2 மோட்டார்சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
டி.என்.பாளையம்
கோபி அருகே உள்ள கணக்கம்பாளையம் பிரிவு பகுதியில் பங்களாப்புதூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 மோட்டார்சைக்களில் 4 பேர் வந்தனர். உடனே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையின்போது 5 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கொண்டு சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர். இதைத்ெதாடர்ந்து அவர்கள் 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘அவர்கள் கோபியை சேர்ந்த பாவேஸ் (வயது 21), பலராம் (32), திவ்னேஷ் (21) மற்றும் கணக்கம்பாளையத்தை சேர்ந்த சக்திவேல் (40) என்பதும், இவர்கள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக மோட்டார்சைக்கிளில் கொண்டு சென்றதுடன், சக்திவேல் வீட்டில் 7 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்ததும்,’ தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்யததுடன், மொத்தம் 12 மூட்டை தடை செய்யப்பட்ட புகையிைல பொருட்கள் மற்றும் 2 மோட்டார்சைக்கிள்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story