ஆசனூர் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து- 3 பேர் உயிர் தப்பினர்
ஆசனூர் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
தாளவாடி
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் தனபால் (வயது 31). இவருடைய மனைவிக்கு திருப்பூரில் குழந்தை பிறந்து உள்ளது. எனவே மனைவியை பார்ப்பதற்காக பெங்களூருவில் இருந்து திருப்பூருக்கு காரில் தனபால் சென்று கொண்டிருந்தார். காரில் தனபாலின் உறவினரான ராதா, அவருடைய மகள் மோனிகா ஆகியோரும் சென்றனர்.
காரை தனபால் ஓட்டினார். நேற்று காலை ஈரோடு மாவட்டம் ஆசனூரை அடுத்த இரும்பு பள்ளம் அருகே சென்றபோது எதிரே வந்த லாரி ஒன்று காரின் மீது உரசியது. இதில் காரானது அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேரும் காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து ஆசனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story