மாவட்ட செய்திகள்

சென்னை காமராஜர் சாலையில் மோட்டார் சைக்கிள் மோதி ரவுடி பலி + "||" + On Kamaraj Road, Chennai Motorcycle collision Rowdy kills

சென்னை காமராஜர் சாலையில் மோட்டார் சைக்கிள் மோதி ரவுடி பலி

சென்னை காமராஜர் சாலையில் மோட்டார் சைக்கிள் மோதி ரவுடி பலி
அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று பாஸ்கர் மீது மோதியது. படுகாயம் அடைந்த அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
சென்னை, 

சென்னை பாடர் தோட்டம் தாஸ் சாலையை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 24). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. பாஸ்கர் தனது நண்பர் மனோஜ் என்பவருடன் நேற்று முன்தினம் இரவு கண்ணகி சிலை அருகே காமராஜர் சாலையை கடந்து செல்ல முயன்றார்.

அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று பாஸ்கர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், பாஸ்கர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

விபத்துக்கு காரணமான மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்சென்றுவிட்டனர். இதுபற்றி அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.