மாவட்ட செய்திகள்

குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் கைது + "||" + Drunken riot; 4 youngster arrested

குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் கைது

குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் கைது
குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி, 

புதுவை மேட்டுப்பாளையம் அரசு ஐ.டி.ஐ. அருகே வாலிபர்கள் சிலர் குடிபோதையில் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபடுவதாக போலீசுக்கு தகவல் வந்தது. அதன்பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர்களை கலைந்து செல்லும்படி எச்சரிக்கை செய்தனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து செல்ல மறுத்தனர்.

இதையடுத்து அவர்களை பிடித்து போலீஸ் நிலையம் கொண்டுவந்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள், புதுவை ஜிப்மர் குடியிருப்பை சேர்ந்த விஜயகுமார் (வயது 25), எழிலரசன் (22), கோரிமேடு காவலர் குடியிருப்பை சேர்ந்த கோகுல் (23), பிரகா‌‌ஷ் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.