ரூ.1,103 கோடி மோசடி செய்தவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு


ரூ.1,103 கோடி மோசடி செய்தவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
x
தினத்தந்தி 2 March 2021 12:04 PM IST (Updated: 2 March 2021 12:05 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.1,103 கோடி மோசடி செய்தவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

கோவை,

கோவை ஒண்டிபுதூரை சேர்ந்தவர் ரமேஷ். இவர் யு.டி.எஸ். என்ற நிதி நிறுவனம் நடத்தி வந்தார். ரூ.25 ஆயிரம் முதலீடு செய்தால் 5 மாதங்கள் கழித்து ரூ.50 ஆயிரம் தருவதாகவும், எவ்வளவு முதலீடு செய்கிறீர்களோ அந்த அளவுக்கு கூடுதல் வட்டி தருவதாக கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதை நம்பி ஏராளமானவர்கள் கோடிக்கணக்கில் முதலீடு செய்தனர். கோவை, திருப்பூர், நீலகிரி, கேரளா உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்களிடம் இருந்து வசூலித்து விட்டு, ரமேஷ் தலைமறை வானார். அவரை சேலத்தில் போலீசார் கைது செய்தனர்.

ரூ.1,103 கோடி

இது குறித்த புகாரின் பேரில் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீ சார், ரமேஷ் நிறுவனத்தில் உள்ள கணினியை கைப்பற்றி ஆய்வு செய்ததின் மொத்தம் ரூ.1,103 கோடி மோசடி செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. இதற்கிடையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாக ரமேஷ் ஐகோர்ட்டில் உறுதிமொழி அளித்தார்.

அதன் அடிப்படையில் ஓய்வு பெற்ற நீதிபதி பாஷா தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. ஆனால் பணத்தை திரும்ப கொடுக்க எந்தவித நடவடிக்கையையும் ரமேஷ் எடுக்காததால், விசாரணைக்குழு கலைக்கப்பட்டது.

மனு தாக்கல்

இதைத்தொடர்ந்து கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ரமேசை முறைப்படி கைது செய்ய கோர்ட்டில் மனுதாக்கல் செய்து அனுமதி பெற்றனர். 

அதன்படி கடந்த மாதம் 26-ந் தேதி ரமேஷ் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட அவரிடம் மோசடி தொடர் பாக காவலில் விசாரிக்க 7 நாள் அனுமதி அளிக்குமாறு முதலீட்டாளர் பாதுகாப்பு கோர்ட்டில்(டேன்பிட்) போலீசார் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனு மீது விசாரணை நடத்தப்பட்டு, நீதிபதி அனுமதி அளித்ததும் விசாரணை நடத்தப்படும் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர். மோசடி செய்த பணத்தில் ரமேஷ் எங்கெல்லாம் சொத்துகளை வாங்கி குவித்துள்ளார்? என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story