மோசூர் கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பணியிடை நீக்கம்
மோசூர் கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பணியிடை நீக்கம்
அரக்கோணம்
மோசூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 26-ந்தேதி பகல் 11.30 மணியளவில் சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள் அவசர கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் சங்க செயலாளர் ஆர்.மோகன் சங்க நலனுக்கு எதிராகவும், நிர்வாக குழுவுக்கும், அங்கத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு எதிராகவும், முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், தமிழ்நாடு கூட்டுறவு சங்க சட்டம் மற்றும் விதிகள் மற்றும் துணை விதிகளுக்கு உட்பட்டு, 3 மாத காலத்துக்கு தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அதற்கான குற்றச்சாட்டு குறிப்பாணை பின்னர் வழங்கப்படும் என்றும், பணியிடை நீக்கத்தின் காலங்களில் பிழைப்பூதியம் வழங்கப்படும் என்றும், அவர் கவனித்து வந்த அனைத்துப் பொறுப்புகளையும் உதவி செயலாளர் வீ.கோவிந்தராஜிடம் ஆர். மோகன் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக, சங்க தலைவர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story