தூத்துக்குடியில் 5 மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது


தூத்துக்குடியில் 5 மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 2 March 2021 5:57 PM IST (Updated: 2 March 2021 5:57 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் 5 மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் 5 மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். 

மோட்டார் சைக்கிள்கள் திருட்டு

தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த சுதாகர் பால்சிங் எடிசன் (வயது 51), தூத்துக்குடி பத்திரகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பிரபாகரன் (56), தூத்துக்குடி சக்திவிநாயகர்புரத்தைச் சேர்ந்த யோவான் (23), தூத்துக்குடி சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த ராம்சுந்தர் (50) மற்றும் முருகன் (51).

இவர்கள் 5 பேரும் தங்களது மோட்டார் சைக்கிள்களை தூத்துக்குடி- பாளையங்கோட்டை சாலையில் கடந்த 28-ந் தேதி நிறுத்தி இருந்தனர். இந்த 5 மோட்டார் சைக்கிள்களையும் மர்ம நபர் திருடிச் சென்று விட்டார். 

வாலிபர் கைது

இதுதொடர்பாக அவர்கள் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், நெல்லை மாவட்டம் மூைலக்கரைப்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சிவசண்முக வேலாயுதம் (33) என்பவர் மோட்டார் சைக்கிள்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மத்திய பாகம் போலீசார் சிவசண்முக வேலாயுதத்தை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 5 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

Next Story