168 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
விழுப்புரம் சரகத்தில் 168 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனா்.
விழுப்புரம்,
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுவதையொட்டி இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி விழுப்புரம் காவல் சரகத்தில் பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதாவது விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி, விழுப்புரம் மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி, விழுப்புரம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகன், ஜெயபாலன், வளவனூர் ரங்கராஜ், மயிலம் செந்தில்குமார், வளத்தி கார்த்திக் உள்ளிட்டோர் கடலூர் மாவட்டத்திற்கும், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ், காட்டுமன்னார்கோவில் ரவிச்சந்திரன், ராமநத்தம் விஸ்வநாதன், நடுவீரப்பட்டு விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் விழுப்புரம் மாவட்டத்திற்கும் மற்றும் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 168 சப்-இன்ஸ்பெக்டர்கள் விழுப்புரம் சரகத்திற்குள் வெவ்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன் பிறப்பித்துள்ளார்.
Related Tags :
Next Story