மயங்கி கிடந்த தொழிலாளி சாவு
தினத்தந்தி 2 March 2021 9:12 PM IST (Updated: 2 March 2021 9:12 PM IST)
Text Sizeமயங்கி கிடந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்
மதுரை,
தென்காசியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 36). இவர் திருவாரூரில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று சொந்தஊருக்கு செல்வதற்காக மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அவர் மது குடித்து போதையில் அங்கு மயங்கி விழுந்தார். இது குறித்த தகவலின் பேரில் போலீசார் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது மாரியப்பன் இறந்து விட்டது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire