மன்னார்குடியில் துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் அணிவகுப்பு


மன்னார்குடியில் துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் அணிவகுப்பு
x
தினத்தந்தி 2 March 2021 10:24 PM IST (Updated: 2 March 2021 10:24 PM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடியில் துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் அணிவகுப்பு நடத்தினர்.

மன்னார்குடி:-
மன்னார்குடியில் துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் அணிவகுப்பு நடத்தினர். 
அணிவகுப்பு
தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இந்த நிலையில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் துணை ராணுவம் மற்றும் போலீசார் இணைந்து நடத்திய அணிவகுப்பு மன்னார்குடியில் நடைபெற்றது.
மன்னார்குடி தேரடியில் இருந்து தொடங்கிய அணிவகுப்பில் இந்தோ - திபத் துணை ராணுவ படையை சேர்ந்த 32 வீரர்கள், ஆயுதப்படை போலீசார் 100 பேர், மன்னார்குடி தாலுகா போலீசார் 70 பேர் என 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 
துணை சூப்பிரண்டுகள்
மன்னார்குடி தேரடியில் இருந்து தொடங்கிய அணிவகுப்பு பந்தலடி, காந்தி சாலை வழியாக சென்று மீண்டும் தேரடியை வந்தடைந்தது.
இந்த அணிவகுப்பில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கார்த்திக் (திருவாரூர்), இளஞ்செழியன் (மன்னார்குடி), ஆயுதப்படை துணை சூப்பிரண்டு பிரபு, இந்தோ - திபெத் எல்லை படை துணை சூப்பிரண்டு சலீம் ஜஹாஹித் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

Next Story