ஆத்தூர், ஆறுமுகநேரி பகுதியில் போலீசார் கொடி அணிவகுப்பு
ஆத்தூர், ஆறுமுகநேரி பகுதியில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினார்கள்.
ஆறுமுகநேரி:
ஆத்தூர், ஆறுமுகநேரி பகுதியில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது.
கொடி அணிவகுப்பு
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசார், துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் ஆத்தூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் ஆகிய பகுதிகளில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினார்கள். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் இந்த அணிவகுப்பு நடந்தது. இதில் மத்திய ரிசர்வ் போலீஸ், தமிழ்நாடு சிறப்பு போலீஸ், ஏ.ஆர். போலீஸ் மற்றும் ஆத்தூர், ஆறுமுகநேரி போலீசார் 280 பேர் கலந்து கொண்டனர்.
காயல்பட்டினத்தில் நிறைவு
இந்த அணிவகுப்பானது ஆத்தூர் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் இருந்து தொடங்கி நரசன்விளை வரையும், பின்னர் ஆறுமுகநேரி ரெயில்வே கேட் அருகில் இருந்து புறப்பட்டு, காயல்பட்டினம் கடற்கரை வரையும் நடந்தது.
இதில் திருச்செந்தூர் போலீஸ் உதவி சூப்பிரண்டு ஹர்ஸ்சிங் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story