கலெக்டர் கார் முன்பு அமர்ந்து மூதாட்டி போராட்டம்


கலெக்டர் கார் முன்பு அமர்ந்து மூதாட்டி போராட்டம்
x
தினத்தந்தி 2 March 2021 10:41 PM IST (Updated: 2 March 2021 10:41 PM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் கார் முன்பு அமர்ந்து மூதாட்டி போராட்டத்தில் ஈடுபட்டார்

மதுரை, 
மதுரை கலெக்டர் அலுவலக உள்புற நுழைவாயில் முன்பு கலெக்டர் கார் நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த கார் முன்பு அமர்ந்து ஒரு மூதாட்டி திடீரென்று போராட்டத்தில் ஈடுப்பட்டார். அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு விசாரணைக்காக அழைத்து சென்றனர். விசாரணையில் அந்த மூதாட்டியின் பெயர் நாகலட்சுமி (வயது63) என்பது தெரியவந்தது. அவர் கலெக்டரிடம் வழங்குவதற்காக ஒரு மனு வைத்திருந்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
எனது கணவர் புத்திசிகாமணி இறந்து விட்டார். எங்களது ஒரே மகனும் சாலை விபத்தில் பலியாகி விட்டார். எனவே நான் மட்டும் அனாதையாக வாழ்ந்து வருகிறேன். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள எனக்கு சொந்தமான காலி நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து விட்டனர். அதே போல் அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள எனது கடையில் குடியிருப்பவர் கடையை காலி செய்ய மறுக்கிறார். எனவே எனது நிலத்தையும், கடையையும் கலெக்டர் தலையீட்டு மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. போலீசார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அந்த மூதாட்டியை சமரசம் பேசி அனுப்பி வைத்தனர்.

Next Story