4 தொகுதிகளிலும் வீடியோ கண்காணிப்பு குழு


4 தொகுதிகளிலும் வீடியோ கண்காணிப்பு குழு
x
தினத்தந்தி 2 March 2021 10:50 PM IST (Updated: 2 March 2021 10:50 PM IST)
t-max-icont-min-icon

4 தொகுதிகளிலும் வீடியோ கண்காணிப்பு குழு

ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதை தொடர்ந்து வாகன சோதனை மற்றும் தேர்தல் விதிமுறை மீறலை கண்காணித்து நடவடிக்கை எடுக்க பறக்கும்படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழு அமைத்து கலெக்டர் உத்தரவிட்டு இருந்தார். இந்தநிலையில் அவர் வீடியோ கண்காணிப்பு குழு அமைத்து உத்தரவிட்டுள்ளார். இதன்படி பரமக்குடி தொகுதிக்கு ராமநாதபுரம் வட்டார புள்ளிவிவர ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையில் 2 பேரும், திருவாடானை தொகுதியில் முதுகுளத்தூர் வட்டார புள்ளிவிவர ஆய்வாளர் வேலுச்சாமி தலைமையிலும், ராமநாதபுரம் தொகுதியில் மண்டபம் வட்டார புள்ளி விவர ஆய்வாளர் ரம்யாபிரிசில்லா தலைமையிலும், முதுகுளத்தூர் தொகுதியில் நயினார்கோவில் வட்டார புள்ளி விவர ஆய்வாளர் மிக்கேல்செல்வி தலைமையிலும் வீடியோ கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் வேட்பாளர் மற்றும் அரசியல் கட்சியினரின் விளம்பரங்கள், வீடியோ காட்சிகள், தொலைக்காட்சி சேனல்களில் வெளியாகும் விளம்பரங்கள், உள்ளூர் கேபிள் தொலைக்காட்சியில் வரும் வேட்பாளர் விளம்பரங்கள், சமூக வலைதளங்களில் வரும் விளம்பரங்கள் முதலியவற்றை கண்காணித்து அதனை வேட்பாளரின் கணக்கில் சேர்க்கும் பணியில் ஈடுபடுவார்கள்.

Next Story