தேர்தல் பணிகளை வழங்க வேண்டும்


தேர்தல் பணிகளை வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 2 March 2021 11:02 PM IST (Updated: 2 March 2021 11:02 PM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரியில் தேர்தல் பணிகளை வழங்க வேண்டும் என்று புகைப்பட கலைஞர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரியில் உள்ள புகைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பில் தாசில்தார் திருநாவுக்கரசுவிடம் ஒரு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் வருகிற 2021 சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பணிகளுக்காக பறக்கும் படை, பதற்றமான இடங்களில் நேரடியாக வீடியோ எடுக்க புகைப்பட கலைஞர்கள் பணி அமர்த்தப்பட உள்ளனர். எனவே அந்த பணியை அந்தந்த பகுதியில் உள்ள புகைப்பட கலைஞர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தனர். மனுவை பெற்று கொண்ட தாசில்தார் இது குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Next Story