சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருகே பிரான்மலை கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து வருடாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு பரம்பரை அறங்காவலர் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் பொன்னம்பல அடிகளார் தலைமை தாங்கினார். பிரான்மலை கிராமத்தார்கள் மற்றும் இசை வேளாளர்கள் முன்னிலையில் பட்டாபிஷேக விழா நடைபெற்றது.உமாபதி சிவாச்சாரியார் தலைமையில் 7 பேர் கொண்ட சிறப்பு குழுவினர் வேள்விகளை நடத்தினர்.சிறப்பு வேள்விகள் முடிவுற்ற நிலையில் புனிதநீர் அங்காள பரமேஸ்வரி அம்மன் மீது ஊற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.