யோகம்பாள்புரத்தில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடையை திறக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


யோகம்பாள்புரத்தில் புதிதாக கட்டப்பட்ட   ரேஷன் கடையை திறக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 2 March 2021 11:12 PM IST (Updated: 2 March 2021 11:12 PM IST)
t-max-icont-min-icon

யோகம்பாள்புரத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட ரேஷன் கடையை திறக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அறந்தாங்கி:
சாலை மறியல் 
அறந்தாங்கி அருகே கோங்குடி ஊராட்சியில் உள்ள யோகம்பாள்புரம், அத்தாணி, ஆவாகுளம் மணவயல், அல்லம்பட்டி, தாளிசேரி உள்ளிட்ட கிராம பொதுமக்களுக்கு அங்காடி பொருட்கள் வழங்க கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் யோகம்பாள்புரத்தில் புதிதாக ரேஷன் கடை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பூட்டியே கிடக்கிறது. இதை உடனே திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இல்லை என்றால் வரும் தேர்தலை அப்பகுதி பொதுமக்கள் புறக்கணித்து விடுவோம் என கூறி நேற்று அறந்தாங்கி-காரைக்குடி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
போக்குவரத்து பாதிப்பு 
இதுகுறித்து தகவல் அறிந்த வட்டாட்சியர் மார்ட்டின் லூதர் கிங், தனி வட்டாட்சியர் (குடிமைப்பொருள் வழங்கல்) கருப்பையா, வட்டார வளர்ச்சி அலுவலர் பெரியசாமி, போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தற்போது மாதத்தில் 2 நாட்கள் பொது இடத்தில் வைத்து பொருட்கள் வழங்கப்படும் என்றும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொண்டதும், கட்டிடம் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். சாலை மறியலால் அறந்தாங்கி-காரைக்குடி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story