குமரலிங்கத்தில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அகற்றம் விதிகளை மீறி சுவர் விளம்பரம் செய்ததால் தி.மு.க.வினர் மீது வழக்குப்பதிவு


குமரலிங்கத்தில்  அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அகற்றம் விதிகளை மீறி சுவர் விளம்பரம் செய்ததால் தி.மு.க.வினர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 2 March 2021 11:16 PM IST (Updated: 2 March 2021 11:16 PM IST)
t-max-icont-min-icon

அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பாக அகற்றப்பட்டது. விதிகளை மீறி சுவர் விளம்பரம் செய்ததால் தி.மு.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

குமரலிங்கம்
குமரலிங்கத்தில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பாக அகற்றப்பட்டது. விதிகளை மீறி சுவர் விளம்பரம் செய்ததால் தி.மு.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

தேர்தல் நடத்தை விதி

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெறுகிறது. இதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. 
இதன்படி பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பரத் தட்டிகள், சுவர் விளம்பரங்கள் ஆகியவற்றை அகற்ற குமரலிங்கம் பேரூராட்சி நிர்வாகமும் குமரலிங்கம் போலீசாரும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
 இதன் தொடர்ச்சியாக குமரலிங்கம் பஸ்  நிலைய பகுதியில் இருந்த அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் குமரலிங்கம் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பாக கழற்றி அகற்றப்பட்டது. 
அமராவதி ஆற்றுப் பாலத்தின் சுவற்றில் தி.மு.க.வினர் சுவர் விளம்பரங்களை செய்திருந்ததால் குமரலிங்கம் போலீசார் தி.மு.க.வினர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

பாரபட்சமின்றி நடவடிக்கை

 இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என குமரலிங்கம் துணை ஆய்வாளர் ராஜ கணேஷ் தெரிவித்தார்.

Next Story