காதல் மனைவி வேறு திருமணம் செய்ததால் எலக்ட்ரீசியன் தற்கொலை


காதல் மனைவி வேறு திருமணம் செய்ததால் எலக்ட்ரீசியன் தற்கொலை
x
தினத்தந்தி 2 March 2021 11:22 PM IST (Updated: 2 March 2021 11:22 PM IST)
t-max-icont-min-icon

ஈத்தாமொழி அருகே காதல் மனைவி வேறு ஒருவரை திருமணம் செய்ததால் எலக்ட்ரீசியன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நாகர்கோவில்:
ஈத்தாமொழி அருகே காதல் மனைவி வேறு ஒருவரை திருமணம் செய்ததால் எலக்ட்ரீசியன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
எலக்ட்ரீசியன்
ஈத்தாமொழியை அடுத்த வடக்கு சூரங்குடி வள்ளுவர்காலனியை சேர்ந்தவர் நடராஜன் மகன் கதிரவன் (வயது 34). இவர், எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். கதிரவன் அதே பகுதியைச் சேர்ந்த அஜிதா (32) என்பவரை கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை. 
இதனால், கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, அஜிதா வேறு ஒருவரை திருமணம் செய்து தனியாக குடும்பம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால், கதிரவன் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.
 தற்கொலை
சம்பவத்தன்று இரவு செம்பொன்கரை காலனியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்ற கதிரவன் விஷம் குடித்து மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். 
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனே, அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலை கதிரவன் பரிதாபமாக இறந்தார்.
சோகம்
 இதுகுறித்து கதிரவனின் தந்தை நடராஜன் ஈத்தாமொழி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
காதல் மனைவி வேறு ஒருவரை திருமணம் செய்ததால் எலக்ட்ரீசியன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

Next Story