கொசு மருந்தை குடித்த பெண் சாவு


கொசு மருந்தை குடித்த பெண் சாவு
x
தினத்தந்தி 2 March 2021 11:53 PM IST (Updated: 2 March 2021 11:53 PM IST)
t-max-icont-min-icon

கொசு மருந்தை குடித்த பெண் சாவு

குளித்தலை
குளித்தலை அருகே உள்ள வளையப்பட்டியை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி சரஸ்வதி (வயது 45). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்த தம்பதியினருக்கு கடன் சுமை இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் சரஸ்வதியை கடந்த 2 ஆண்டுக்கு முன்பு பாம்பு ஒன்று கடித்து உள்ளது. இதனால் அவரது வலது கால் பாதிக்கப்பட்டு, அவரால் சரியாக நடக்க முடியாதாம். இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்த சரஸ்வதி நேற்று முன்தினம் கொசு மருந்தை தண்ணீரில் கலந்து குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சரஸ்வதி உயிரிழந்தார். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story