துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு


துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
x
தினத்தந்தி 3 March 2021 12:02 AM IST (Updated: 3 March 2021 12:02 AM IST)
t-max-icont-min-icon

துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

கரூர்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடைபெற உள்ளது. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதனையொட்டி கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று கொடி அணிவகுப்பு நடைபெற்றது. கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் அணிவகுப்பை தொடங்கி வைத்தார். இந்த அணிவகுப்பு வாங்கப்பாளையத்தில் தொடங்கி வெங்கமேடு, ஜவகர் பஜார், மனோகரா கார்னர் வழியாக சென்று திருவள்ளுவர் மைதானத்தில் முடிவடைந்தது. தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்துள்ள 91 துணை ராணுவ படையினர் மற்றும் போலீசார் ஏராளமானோர் இந்த கொடி அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.

Next Story