கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை
கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை
கமுதி
கமுதி அருகே கூலித் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
வெட்டிக்கொலை
கமுதி அருகே அரியமங்கலத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 47). கூலி தொழிலாளி. நேற்று இவர் அப்பகுதியில் உள்ள கண்மாய் கரையில் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், கோவிலாங்குளம் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, அப்பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் கண்ணன் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதனையடுத்து கண்ணன் உடலை போலீசார் கைப்பற்றி கமுதி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணை
கோவிலாங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை கண்டுபிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரையை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் வி.கே. குருசாமி என்பவருக்கும், ராஜபாண்டி என்பவருக்கும் முன்விரோதம் காரணமாக அவர்களது ஆதரவாளர்கள் சிலர் கொல்லப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.
தற்போது கொலை செய்யப்பட்ட கண்ணன், வி.கே.குருசாமி தரப்பை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. எனவே அவரும் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story