கிரிக்கெட் போட்டி
கிரிக்கெட் போட்டி
கமுதி
கமுதி அருகே காடமங்கலத்தில் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு கமுதி ஒன்றிய அ.தி.மு.க., இளைஞர் பாசறை, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் காடமங்கலம் பசும்பொன் கிரிக்கெட் கிளப் சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடின. போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் விழா கமுதி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் காளிமுத்து தலைமையில் நடந்தது. ஒன்றிய அவைத்தலைவர் பம்மனேந்தல் சேகரன், இளைஞரணி செயலாளர் கருமலையான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப செயலாளர் நிர்மல்குமார் வரவேற்று பேசினார். முதல் பரிசு பெற்ற காடமங்கலம் பசும்பொன் கிரிக்கெட் அணிக்கும் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முனியசாமி, மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி சார்பில் ரூ. 30 ஆயிரமும், இரண்டாவது இடம் பிடித்த இலந்தைக்குளம் அணிக்கு ரூ.25 ஆயிரம் ஒன்றிய செயலாளர் காளிமுத்துவும் வழங்கினர். 3-வது பரிசாக ரூ.20 ஆயிரத்தை கமுதி அணிக்கு காடமங்கலம் ஆசிரியர் வேல்முருகன், சவுதி மும்மூர்த்தி, அங்காள அம்மையும் வழங்கினர்.
Related Tags :
Next Story