8 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு


8 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
x
தினத்தந்தி 3 March 2021 12:06 AM IST (Updated: 3 March 2021 12:06 AM IST)
t-max-icont-min-icon

8 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

சாயல்குடி
சாயல்குடி பகுதிகளில் உள்ள உணவகங்கள். பேக்கரிகள் மற்றும் கடைகளில் ராமநாதபுரம் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் திருவள்ளுவன், குழந்தை பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார் தலைமையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் 18 வயதுக்கு உட்பட்ட 8 குழந்தை தொழிலாளர்கள் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டு மாவட்ட குழந்தை நல குழுவில் ஒப்படைக்கப்பட்டனர். 18 வயதுக்கு உட்பட்ட குழந்தை தொழிலாளர்களை அபாயகரமான தொழில் நிறுவனங்களிலும், இதர நிறுவனங்களிலும் வேலைக்கு அமர்த்தினால் அதன் உரிமையாளர்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதமும், 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.

Next Story