குன்னூர் பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனை


குன்னூர் பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனை
x
தினத்தந்தி 3 March 2021 12:31 AM IST (Updated: 3 March 2021 12:53 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர் பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனை செய்தனர்.

குன்னூர்

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதனை தொடர்ந்து அரசியல் கட்சியினர் பணம் மற்றும் பரிசு பொருட்களை வாக்காளர்களுக்கு கொடுக்கிறார்களா என்று தேர்தல் பறக்கும் படையினர்கள் கண்காணித்து வருகின்றனர். 

மேலும் வாகனங்களில் பணம் கொண்டு செல்லவும் கட்டுபாடு விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் குன்னூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் அதிகாரி தலைமையில் வருவாய்த்துறை அலுவலர் மற்றும் 4 போலீசார் கொண்ட தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த பறக்கும் படையினர் நேற்று குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் மாவட்ட நுழைவு வாயிலான பர்லியார், மரப்பாலம், சிம்ஸ் பூங்கா, வண்டி சோலை ஆசிய பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.


Next Story