அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி


அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி
x
தினத்தந்தி 3 March 2021 12:41 AM IST (Updated: 3 March 2021 12:41 AM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது

கரூர்
ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 28-ந் தேதி அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கரூர் மாவட்ட அரசு அருங்காட்சியகம் சார்பில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் விஜயராணி முன்னிலை வகித்தார். அருங்காட்சியக காப்பாட்சியர் மணிமுத்து வரவேற்றார். இந்த கண்காட்சியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் பங்கேற்று காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிப்பது, ராக்கெட் ஸ்டவ், உணவு பிரமிடு, கற்றாழை மூலம் உடலுக்கு தீங்கு விளைவிக்காத சோப் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர். கண்காட்சியில் சிறந்த கண்டுபிடிப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் அறிவியல் கண்காட்சியில் பங்கேற்ற அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் சமூக, இயற்கை ஆர்வலர் தீபம் சங்கர், மாவட்ட சுற்றுச்சூழல் துறை ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story